சென்னை ஐஐடியின் கலாச்சார ஆண்டு விழா: வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது

சென்னை: சென்னை ஐஐடியில் 28வது ஆண்டாக ‘சாரங் 2023’ என்ற பெயரில் இந்த வருடம் நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி நேற்று அளித்த பேட்டி: இந்த ஆண்டு 80,000 பேர் பங்கேற்கின்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட நிகழ்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பார்ப்பதற்கும் ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டை ‘புக் மை ஷோ‘ வில் சென்று பெற்று கொள்ளலாம். மேலும் கூடுதல் தகவல்களை saraang.org என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* பொங்கலுக்கு இடமில்லை

சாரங் கலை நிகழ்ச்சியின் இறுதி நாளான 15ம் தேதி பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. ஆனால் கலாச்சார நிகழ்ச்சிகள் என்று கூறிய இந்த சாரங் 2023ல் பொங்கல் விழா இடம் பெறவில்லை. அடுத்தாண்டு இடம்பெறும் என ஐஐடி இயக்குநர் தெரிவித்தார்.

Related Stories: