அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 57 பைசா உயர்ந்து ரூ.81.78 ஆக உள்ளது. கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு மிகப்பெரிய ஒருநாள் உயர்வாக இது பார்க்கப்படுகிறது. அந்நிய செலாவணி வர்த்தகர்கள், ஆசிய நாணயங்களில் ரூபாய் சிறந்த செயல்திறன் கொண்டதாகவுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 82.35-ஆக இருந்தது.