2020ல் நிர்ணயிக்கப்பட்ட தொகையை தாண்டி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.21,000 கோடி கூட்டுறவு கடன்: அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்

சென்னை: கடந்த 2020ம் ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஆயிரம் கோடி தொகையை தாண்டி 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூட்டுறவு துறையின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதத்துடன் கூறினார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும்  மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர்  சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி பயனாளிகளுக்கு சான்று வழங்குதல் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புதிய வங்கி கடன் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக  தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்,  இந்து சமய அறநிலையத்துறை  அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்து  சான்றிதழ்களை வழங்கினர். புதிதாக மூன்று கோடிக்கு மேலாக கடன் வழங்கினர்..

இதில், அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:முதலமைச்சர் மகளிர் பொருளாதாரம் உயர்வதற்கு 20 ஆயிரம் கோடி வரை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் தொகை வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்தார். ஆனால், நிர்ணயம் செய்யப்பட்ட அளவைவிட கூடுதலாக  கடந்த 2022ம் ஆண்டு 21 ஆயிரம் கோடி கடன் தொகையாக வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. தற்போது இந்த துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினின் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.  முதலமைச்சர் போல் மிகவும் சிறப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார். ஆண்களுக்கு நிகராக பெண்களும் முன்னேற வேண்டும் என்று எண்ணுபவர் முதலமைச்சர்.  அதுமட்டுமின்றி  முதலமைச்சர் ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் 10 ஆயிரம் கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் கடன் தொகையின் அளவு தாண்டி, 12 ஆயிரம் கோடி வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை எட்ட உள்ளது.

Related Stories: