சென்னை அருகே படப்பையில் மார்ச் 5-ல் ஜல்லிக்கட்டு: அமைச்சர் தா.மோ அன்பரசன் பேட்டி

சென்னை: சென்னை அருகே படப்பையில் மார்ச் 5-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். படப்பையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 501 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் ஜல்லிக்கட்டை கண்டுகளிக்கும் விதமாக படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்ட திமுகவினர், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டின் சொர்க்க பூமியாக இன்னும் திகழ்ந்து வருகிறது.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம் ,அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும்,திருச்சி பெரிய சூரியூர்,நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ,கூலமேடு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம்,புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை,வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடைபெறும்.

இந்திலையில் சென்னை மக்கள் கண்டுகளிக்கும் வகையில் சென்னைக்கு அருகே உள்ள படப்பையில் மார்ச் 5-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: