ஆர்எஸ்எஸ் தொண்டரை போல செயல்படுகிறார் ஆந்திரா, மகாராஷ்டிரா பெயரை மாற்ற சொல்ல தைரியம் உள்ளதா?...ஆளுநருக்கு திருமாவளவன் எம்பி கேள்வி

நெல்லை: ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்ற ஆசைப்படுபவர்களுக்கு ஆந்திரா, மகாராஷ்டிரா  பெயரை மாற்றச்சொல்ல தைரியம் உள்ளதா?’ என திருமாவளவன் கேள்வி எழுப்பினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று அளித்த பேட்டி:  பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் முன்னெடுத்த அரசியலை பழிக்க வேண்டும் என்பதற்கு எதிரான ஒரு கருத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விரும்புகிறார்.

அவர் அரசமைப்பு சட்டத்தின் பிரதிநிதி அதனை மறந்துவிட்டு ஆர்எஸ்எஸ் தொண்டரை போல செயல்பட்டு வருகிறார். அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ். பணிகளை மேற்கொள்ளலாம். தமிழகம் என்றாலும், தமிழ்நாடு என்றாலும் ஒரேபொருளை குறிக்கும் என்பதை அவருக்கு சொல்லி கொடுத்தவர்கள் மறைத்து இருக்கலாம். இதனை அவர் விவாதத்துக்கு உட்படுத்தியது தேவையற்ற ஒன்று. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். அப்படிப்பட்டவர் தமிழகத்தில் கவர்னராக நீடிக்க தகுதியில்லை.

தமிழ்நாடு என்பது போல்  ஆந்திரபிரதேச மாநிலத்தின் பெயரில் உள்ள பிரதேஸ் என்பதும், மகாராஷ்டிரா  மாநிலத்தின் பெயரில் உள்ள ராஷ்டிரம் என்பதும் நாடு என்ற பொருளைத்தான்  குறிக்கிறது. மத்தியபிரதேசம், உத்தரபிரதேசமும் அதே பொருளில்தான் உள்ளது.  அங்கெல்லாம் பெயரை மாற்றச்சொல்ல துணிச்சல் இருக்கிறதா? அவர்களுக்கு  தைரியம் இருக்கிறதா?  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: