அமைச்சர் உதயநிதி பிறந்தநாளையொட்டி “நம்ம தலைவர்- நம்ம முதல்வர்” கோப்பை கிரிக்கெட் போட்டி: திருத்தணி நகர அணிக்கு முதல் பரிசு

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்ட “நம்ம தலைவர் - நம்ம முதல்வர்” கோப்பைக்கான 20 ஓவர் ‘மாபெரும் கிரிக்கெட் போட்டி திருப்பாச்சூர் கேபிஎஸ் கிரிக்கெட் அகாடமியில் கடந்த 2ம் தேதி துவங்கியது. இந்த போட்டியை மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ தலைமை தாங்கி டாஸ் போட்டு துவக்கிவைத்தார்.

தினமும் காலையும், மாலையும் 6 நாட்கள் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் திருத்தணி நகர அணியும் மாவட்ட அணியும் மோதியது.‌ இதில் வெற்றிபெற்ற திருத்தணி நகர அணிக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, திருத்தணி எம்.பூபதி, நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேஷன், கே.திராவிட பக்தன், வி.சி.ஆர்.குமரன், சி.ஜெயபாரதி, உதயமலர் பாண்டியன், மிதுன், பொதுக்குழு உறுப்பினர்கள் ப.சிட்டிபாபு, எஸ்.கே.ஆதாம், சுப்ரமணி முன்னிலை வகித்தனர்.

இதில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற திருத்தணி நகர அணிக்கு  ரூ.1 லட்சம்,‌ கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளரும் இளைஞர் அணி மண்டல பொறுப்பாளருமான ப.அப்துல் மாலிக் 2ம் பரிசை வென்ற மாவட்ட அணிக்கு ரூ.75 ஆயிரம், கோப்பை, சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: