மென்பொருள் தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்

புதுடெல்லி: மென்பொருள்  உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற முயற்சிக்க வேண்டும்’ என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அனைத்துப் படிநிலைகளிலும் சிறப்பாக செயல்படும் அரசு சார்ந்த  நிறுவனங்களுக்கு டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 7வது டிஜிட்டல் இந்தியா விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு 22 நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியா  முன்னணி நாடாக விளங்குகிறது.

குறிப்பாக கொரோனா பேரிடரின்போது, இது இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளுக்கு பயன் ஏற்பட்டது. சர்வதேச அளவில் நம் நாட்டின் பெருமைகளை கொண்டு சேர்ப்பதிலும் டிஜிட்டல் இந்தியா  பெரும் பங்கு வகிக்கிறது. ஜி-20 நாடுகளின் அமைப்பில் இந்தியா தற்போது தலைமை வகிக்கிறது. இந்த நேரத்தில் இது முக்கியத்துவம் பெறுகிறது. சாப்ட்வேர் துறையில் இந்தியா பிரபலமாகி விட்டது. இனி மென்பொருள் பொருட்கள் உற்பத்தி மையமாக உருவாக்குவதற்கு பாடுபட வேண்டும்’’ என்றார்.

Related Stories: