சென்னை: வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழில் ‘வாரிசு’, தெலுங்கில் ‘வாரிசுடு’ என்ற பெயர்களில் உருவாகியுள்ள படங்களில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, யோகி பாபு, ஜெயசுதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 11ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் விஜய் தம்பி வேடத்தில் நடித்துள்ள ஷாம் கூறியதாவது: எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா, மும்தாஜ் நடித்த ‘குஷி’ படத்தில் நானும் நடித்திருந்தேன். அதற்குப் பிறகு இப்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளேன். தனி ஹீரோவாக பல படங்களில் நடித்திருக்கும் நான், சில படங்களில் மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். இன்று அவர்கள் ‘பான்’ இந்தியா நடிகர்களாக மாறியுள்ளனர்.