கள்வனில் ஜி.வி.பிரகாஷ் ஜோடி இவானா

சென்னை: ஆக்செஸ்  பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்துள்ள படம், ‘கள்வன்’.  இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா, தீனா, கு.ஞானசம்பந்தம்,  வினோத் முன்னா நடித்துள்ளனர். பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படத்தை தொடர்ந்து  மீண்டும் ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா ஜோடி சேர்ந்துள்ளனர். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘லவ் டுடே’ என்ற படத்திலும் இவானா நடித்திருந்தார். காமெடி  அட்வெஞ்சர் டிராமாவாக உருவாகியுள்ள ‘கள்வன்’ படத்தை பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

மேலும், ரமேஷ் அய்யப்பனுடன் இணைந்து கதை, திரைக்கதை  எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து வசனம்  எழுதியுள்ளனர். எஸ்.ஜே.அர்ஜூன், சிவகுமார் முருகேசன் இணைந்து கூடுதல்  திரைக்கதை எழுதியுள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் சினேகன், ஏகாதசி,  மாயா மகாலிங்கம், நவக்கரை நவீன் பிரபஞ்சம் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்துவிட்டதால், திரைக்கு வரும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories: