கொரோனா குறித்து விமர்சனம் 1,120 சமூக வலைதள பக்கம் முடக்கம்: சீனா திடீர் நடவடிக்கை

பெய்ஜிங்: சீனாவில் அரசின் கொரோனா கொள்கைகள் குறித்து விமர்சித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது.

சீனா கொரோனாவுக்கு எதிராக பூஜ்ய கொள்கையை தளர்த்தியதால் மீண்டும் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அரசின் கொரோனா தொற்று கொள்கைகைகள் பற்றி விமர்சிக்க தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களிலும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அரசின் கொரோனா கொள்கை குறித்து விமர்சித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் சமூக வலைதள பக்கங்களை சீன அரசு முடக்கியுள்ளது. இது தொடர்பாக பிரபல சைனா வெய்போ சமூக ஊடக தளம் கூறுகையில், ‘‘நிபுணர்கள், அறிஞர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.

இதுவரை சுமார் 12,854 விதிமீறல்கள் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1120 சமூக வலைதள கணக்குகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது அல்லது நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான சட்டவிரோத கருத்துகள் மீதான விசாரணை மற்றும் அவற்றை நீக்குதல் நடவடிக்கை தொடரும். பெரும்பாலான பயனர்களுக்கு இணைக்கமான மற்றும் நட்பு சமூக சூழல் உருவாக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: