சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: 2022-23ம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். கள்ளர் சீரமைப்பு பள்ளி, விடுதிகள் மற்றும் இத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரி /பள்ளி விடுதிகளின் நிர்வாகம், 11ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் முறையாக நடைபெறுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். விடுதி மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு சீருடைகள் வழங்கும் திட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பை சேர்ந்த மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் தகுதியானவர்களுக்கு சென்றடைய வேண்டும்.
