இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு 1000 பேர் பங்கேற்கும் மாரத்தான் போட்டி நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் எம்எல்ஏக்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை திருவள்ளூரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும் திருத்தணி எம்எல்ஏவுமான எஸ்.சந்திரன் தலைமை தாங்கினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, எம்.பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தா.மோதிலால் ஆகியோர் வரவேற்றனர். இக்கூட்டத்தில் மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆர்டிஇ.ஆதிசேஷன், கே.திராவிடபக்தன், விசிஆர்.குமரன், சி.ஜெயபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் ப.சிட்டிபாபு, எஸ்.கே.ஆதாம், மு.சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், மோ.ரமேஷ், எஸ்.மகாலிங்கம், கே.அரிகிருஷ்ணன், ஆர்த்தி ரவி, பெ.பழனி, சி.என்.சண்முகம், ஜி.ரவீந்திரா, என்.கிருஷ்ணன், முன்னாள் நகரமன்ற தலைவர் பொன் பாண்டியன், பி.ரவீந்திரநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில் மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ பேசும்போது, திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 1000 பேர் பங்கேற்கும் மாபெரும் மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார். மேலும், திமுக இளைஞரணி நிர்வாகிகள் இல்லந்தோறும் நேரில் சென்று, உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகளவில் தீவிரப்படுத்த வேண்டும்.  

இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்ட முடிவில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.எம்.சுகுமாரன் நன்றி கூறினார்.

Related Stories: