நடிகை ஜாக்குலின் இன்று கோர்ட்டில் ஆஜர்: லீனா மரியாவின் 26 கார்களை பறிமுதல் செய்ய அனுமதி

புதுடெல்லி: பணம் மோசடி வழக்கில் தொடர்புடைய நடிகை ஜாக்குலின் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜரானார். இதே வழக்கில் ெதாடர்புடைய மற்றொரு நடிகை லீனா மரியாவின் 26 கார்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர், தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார். ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்காக ஜாக்குலின் பெர்னாண்டஸ் இன்று ஆஜரானார்.

அவர்  சுகேஷ் சந்திரசேகரிடம் பெற்ற பரிசுப் பொருட்கள் குறித்தும், இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் வாக்குமூலம் அளித்தார். இவ்வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் மனைவியும் நடிகையுமான லீனா மரியா பாலின் சொத்தில் முடக்கப்பட்ட 26 கார்களை பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குனரகத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த வழக்கில், மற்றொரு நடிகையான நோரா பதேஹிக்கும் தொடர்பு இருப்பதாக வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆனால், அவர் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் சில ஊடகங்கள் சதி செய்ததாக அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: