திருப்பதியில் இலவச சிறப்பு தரிசன டோக்கன் நாளை வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.  

ஜன 12 முதல் 31 வரை முத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன டோக்கன் நாளை வெளியிடப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. https://tirupatibalaji.ap.gov.in என்ற திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரியில் டோக்கன் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

காலை 9 மணி முதல் வெளியாகும் இலவச சிறப்பு தரிசன டோக்கன் முன்பதிவு செய்தோர் பிற்பகல் 3 மணிக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது. தீராத நோயால் பாதிக்கப்பட்ட பக்தர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தரிசன டோக்கன் பெறலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்த தரிசன டிக்கெட்டுகள் முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். பக்தர்கள் இதை கருத்தில் கொண்டு அந்தந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Related Stories: