ஆளுநர் ரவியை நீக்கக்கோரி அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும்: கே.எஸ்.அழகிரி சாடல்

சென்னை: ஆளுநர் ரவியை நீக்கக்கோரி அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் ரவிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கூறுவது அப்பட்டமான அவதூறு என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார். கடந்த 8 ஆண்டு கால மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ள மொத்த கடன் தொகை ரூ.83 லட்சம் கோடி. இந்தியாவை கடன்கார நாடாக திவாலான நிலைக்கு கொண்டு சென்றது மோடி அரசு. உண்மை நிலை இப்படியிருக்க, தமிழக அரசின் கடன் தொகையை பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன அருகதை உள்ளது? எனவும் கே.எஸ்.அழகிரி சாடினார்.

Related Stories: