குஜராத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வணிக வளாகம் ஒன்றில் நடந்த பதான் திரைப்படத்தின் புரோமோஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வன்முறையில் ஈடுப்பட்டனர். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த பதான் திரைப்படம் வருகிற 25-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் இருந்து அண்மையில் வெளியான பேஷரம் ரங் பாடல் சர்ச்சைக்குள்ளானது. பாடலில் தீபிகா படுகோன் கவி நிற உடை அணிந்திருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் பதான் படத்தை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மேலும், இந்த படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தனர்.