அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்

சென்னை: தமிழக அரசு, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; டெல்டா மாவட்டப்பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு விளைநிலங்களில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிரை நம்பி இருக்கிறார்கள். எனவே தமிழக அரசு, சம்பா நெற்பயிர் அறுவடை செய்யும் இக்காலத்தில் கடின உழைப்பை மேற்கொண்ட விவசாயிகளின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு, அவர்கள் எதிர்பார்க்கும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள், ஆதார விலை ரூ. 3,000, கருகிய பயிர்களுக்கான இழப்பீடு ஆகிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கை யில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: