திரைத்துறையில் உள்ள பிற்போக்கு எண்ணங்களை முதல் முதலில் உடைத்து எரிந்தவர் கலைஞர்: அமைச்சர் சிவசங்கர் பேச்சு

சென்னை: திரைத்துறையில் உள்ள பிற்போக்கு எண்ணங்களை முதல் முதலில் உடைத்து எரிந்தவர் கலைஞர் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறிருக்கிறார்.  சென்னை லயோலா கல்லுரி மாற்று ஊடக மையம் சார்பில், அதன் 10ம் ஆண்டு வீதி விருது விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். இதில் பேசிய அமைச்சர் சிவசங்கர், வெறும் பூரணக்கதைகள் மட்டுமே கதை வடிவில் வந்த நிலையை மாற்றி மக்களுக்கு தேவையான சமூக கருத்துக்களை பராசக்தி என்னும் திரைக்காவியத்தின் மூலமக தம்முடைய 24 வயதில் கொண்டு சேர்த்தவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் மாணவி ஆடிய கரகாட்டத்துடன் கும்மி ஆட்டம் பழங்குடிகளின் இசை உள்ளிட்டவை கலைஞர்கள் நிகழ்த்தி காட்டியது பார்வையாளர்களை வெகுவும் கவர்ந்தது. விழாவின் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் சீனுராமசாமி உள்ளிட்டவர்கள் இதில் பங்கெடுத்தனர்.

Related Stories: