2023ம் ஆண்டுக்கான உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் எனில் ரோஹித், விராட் கோலி போன்ற தனிப்பட்ட வீரர்களை நம்பி பயனில்லை: கபில்தேவ் கருத்து

மும்பை: ரோஹித், விராட் கோலியை நம்பி பயனில்லை என முன்னாள் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில்  நடைபெற உள்ளது. இதையொட்டி சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, ஆலோசனை நடத்தியது. இதில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, கவுரவ செயலாளர் ஜெய் ஷா, கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட், தேசிய கிரிக்கெட் அகடமி(என்சிஏ) தலைவர் விவிஎஸ் லட்சுமணன், தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா ஆகியோர் பங்கேற்றனர்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியை தேர்வு செய்வது, தயார் செய்வது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகள், வாய்ப்புகள், வீரர்களின் பணிசு்சுமை மேலாண்மை, உடற்பயிற்சிக்கான அளவு கோல்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இதன் முடிவில் 20 பேர் கொண்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் மூத்த கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கே.எல். ராகுலுக்கு இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் கே.எல். ராகுல் கடந்த சில போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் துணைக் கேப்டன் பொறுப்பில் கே.எல்.ராகுல் இருக்கிறார். இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் அளித்துள்ள பேட்டியில்; இந்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல ஆர்வம் காட்டுகிறது. இந்திய அணி, உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால் சில கடின முடிவுகளை எடுக்கவேண்டும். இந்திய கிரிக்கெட் அணியில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அப்போது தான் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியும்.

இந்த ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டுமானால், கடின முடிவுகளை எடுக்கவேண்டும். விராட் கோலி, ரோஹித் சர்மா, மேலும் 2-3 வீரர்களை வைத்துக்கொண்டு உங்களால் உலகக்கோப்பையை வெல்லமுடியாது, அது ஒருபோதும் நடக்காது. இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: