கபசுர குடிநீர் பொடியை தமிழ்நாட்டில் வாங்கி பயன்படுத்த ஒன்றிய அரசு திட்டம்

டெல்லி: மாற்று மருந்ததான கபசுர குடிநீரை தமிழக அரசிடம் இருந்து கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் விநியோகிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நோய் எதிர்ப்பு சத்தி கொண்ட கபசுர குடிநீர் கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தில் 3 லட்சம் அளவிற்கு பயன்படுத்தப்பட்டது. கபசுர குடிநீரில் சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதோடை இலை, நிலவேம்பு உள்ளிட்ட 15 மூலிகைகள் இடம்பெற்றுருப்பதால் இதனை கொதிக்கவைக்கும் போது பக்கவிளைவு ஏற்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

கபசுர குடிநீர் பொடியை தமிழ்நாடு அரசின் டாம்கால் நிறுவனம் அதிக அளவில் தயாரித்து பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பிவைக்கிறது, இந்த நிலையில் தமிழ்நாடு அரசிடம் இருந்து கபசுர குடிநீரை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் விநியோகிக்கலாமா என ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது இதற்கான பேச்சுவார்த்தையை தமிழ்நாடு அரசுடன் ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. கபசுர குடிநீர் சூரணத்தை 100 கிராம் பாக்கெட்களாக வாங்கி, இந்தியா முழுமைக்கும் வழங்க முடியுமா என்று தமிழக அரசிடம் கேட்டபட்டுருப்பதாக ஒன்றிய அரசின் ஆயுஷ் வட்டார அமைச்சகம் தெரிவித்துள்ளன.    

Related Stories: