அண்ணாநகர்: இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டதால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மதுரை, வேலூர், ஒசூர், சேலம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து தினமும் லாரிகளில் மூலம் பூக்கள் வருகிறது. இன்று வைகுண்ட ஏகாதசி என்பதால் இன்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.2,000 க்கும் முல்லை 1500க்கும் ஜாதிமல்லி 900க்கும் கனகாம்பரம் ரூ.1000க்கும், சம்பங்கி ரூ.150க்கும் பன்னீர் ரோஸ் ரூ.140க்கும் சாக்லெட் ரோஸ் ரூ.180க்கும், அரளி பூ 250க்கும் சாமந்தி ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
