சின்னமனூர் பகுதியில் 2ம் போக நெல்நடவு பணி நிறைவு

போடி: தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டுதோறும் இருபோகம் நெல்சாகுபடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சின்னமனூர் பகுதியில் ஒருபோக நெல் சாகுபடி பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முடிந்தது. அதன்பிறகு, இரண்டாம் போகம் நடவு பணிகளுக்கு போதுமான பாசனநீர் இருந்ததால், கடந்த நவம்பர் இரண்டாம் வாரத்தில் விவசாயிகள் நாற்றாங்கால் பாவி 25 நாட்களில் வளர்த்து எடுத்து, நடவு பணியை துவங்கினர்.

இப்பணி தற்போது வரை 90% நிறைவுபெற்றுள்ளது. மீதம் உள்ள 10 சதவீதம் பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவு பெற்றுவிடும். தற்போது நெல்பயிர்களை செழிப்பாக வளர்க்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் சின்னமனூர் பகுதியில், எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளித்து வருகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்டுகளித்து செல்கின்றனர்.

Related Stories: