துவரங்குறிச்சி அருகே இன்று காலை பள்ளத்தில் பஸ் பாய்ந்து விபத்து: 55 ஐயப்ப பக்தர்கள் தப்பினர்

துவரங்குறிச்சி: புதுச்சேரியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் தனியார் பஸ்சில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். இன்று காலை திருச்சியை அடுத்த துவரங்குறிச்சி அருகே அதிகாரம் என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன் பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பஸ் டிரைவர் மற்றும் 55 ஐயப்ப பக்தர்கள் காயங்களின்றி உயிர் தப்பினர். இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: