பெண் பயிற்சியாளருக்கு துன்புறுத்தல்; பாஜக அமைச்சர் மீது பாலியல் வழக்கு: அரியானாவில் பரபரப்பு

சண்டிகர்: அரியானா மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் மீது, பெண் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில், அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அரியனாவை சேர்ந்த முன்னாள் ஹாக்கி வீரர் மற்றும் தேசிய அணியின் கேப்டனாக சிறப்பிடம் வகித்த சந்தீப் சிங், தற்போது மாநில பாஜக அரசின் விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

இவர் மீது தேசிய தடகள வீராங்கனையும், தடகள பெண் பயிற்சியாளருமான ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். தனது முகாம் அலுவலகத்துக்கு வரவழைத்து, முறையற்ற வகையில் நடக்க முயற்சித்ததாக பெண் பயிற்சியாளர் குற்றம்சாட்டினார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்து அடிப்படை மற்றும் ஆதாரமற்றவை  என்று அமைச்சர் சந்தீப் சிங் கூறிவந்தார்.

இதற்கிடையே அமைச்சர் மீதான பாலியல் புகாரையடுத்து, இந்திய தேசிய லோக் தளம் கட்சி, ‘பெண் பயிற்சியாளரின் புகார் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும். விசாரணை முறையாக நடைபெற அமைச்சர் சந்தீப் சிங்கை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்’என்று கோரியது. இந்நிலையில் தடகளப் பயிற்சியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், அமைச்சர் சந்தீப் சிங் மீது சண்டிகர் போலீசார் இன்று பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: