20 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 20 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவு: சிவில் சப்ளை சிஐடி டிஜிபி ஆபாஷ்குமார், தீயணைப்புத்துறை இயக்குநராகவும், விடுமுறையில் இருந்த பி.கே.ரவி, ஊர்க்காவல்படை டிஜிபியாகவும், தலைமையிட ஏடிஜிபி வெங்கட்ராமன், நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாகவும் கவனிப்பார். மதுவிலக்கு ஐஜி ஆசையம்மாள், பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாகவும், மதுரை கமிஷனராக இருந்த செந்தில்குமார், டிஜிபி அலுவலகத்தில் பொதுப் பிரிவு ஐஜியாகவும், திருப்பூர் கமிஷனர் பிரபாகரன், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய ஐஜியாகவும், கோவை டிஐஜி முத்துச்சாமி, வேலூர் டிஐஜியாகவும், தஞ்சாவூர் டிஐஜி கயல்விழி, கடலோர காவல்படை டிஐஜியாகவும், அந்தப் பதவியில் இருந்த சின்னச்சாமி, தொழில் நுட்பப் பிரிவுக்கும், தூத்துக்குடி பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் ராஜராஜன், சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராகவும், சென்னை மெட்ரோ ரயில் பாதுகாப்பு அதிகாரி பிரபாகர், நீலகிரி எஸ்பியாகவும், சென்னை தலைமையிட துணை கமிஷனர் செந்தில்குமார், தென்காசி எஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 தர்மபுரி எஸ்பி கலைச்செல்வன், நாமக்கல் எஸ்பியாகவும், சென்னை சிறப்புப் பிரிவு எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், தர்மபுரி எஸ்பியாகவும், போலீஸ் அகாடமி எஸ்பி சிவக்குமார், சேலம் எஸ்பியாகவும், சிபிசிஐடி எஸ்பி முத்தரசி, தஞ்சாவூர் எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த ரவளிப் பிரியா, சிபிசிஐடி எஸ்பியாகவும், போலீஸ் நவீன கட்டுப்பாட்டு அறை எஸ்பி ஜெயலட்சுமி, ஆவடி போக்குவரத்து துணை கமிஷனராகவும், ரயில்வே எஸ்பி உமா, சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியாகவும், அந்தப் பதவியில் இருந்த அருள் அரசு, சிறப்பு பிரிவு எஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: