திருவட்டாரில் திருமண விழாவில் சோகம்: விருந்து சாப்பிட்ட பெண் செப்டிக் டேங்க் உடைந்து பலி

குலசேகரம்: திருவட்டார் அருகே சமூக நல கூடத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்டுவிட்டு கைகழுவ சென்ற பெண், செப்டிக் டேங்கில் விழுந்து இறந்தார். குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த ஒட்டலிவிளையில் உள்ள சமூக நல கூடத்தில் நேற்று முன்தினம் மாலை திருமண நிகழ்ச்சி நடந்தது.  இரவு வரை விருந்து தொடர்ந்தது. விழாவில் ஒட்டலிவிளை அருகே முதலார் பகுதியை சேர்ந்த ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி மோகன்தாஸ் (50), அவரது மனைவி சுஜிலா (48) ஆகியோரும் பங்கேற்றனர். செப்டிங் டேங்க் அருகிலேயே வாஷ்பேசின் இருந்தது.

சாப்பிட்டு முடித்த சுஜிலா கை கழுவ சென்ற போது செப்டிக் டேங்க் காங்கிரீட் சிலாப் திடீரென உடைந்தது. இதனால் அவர் டேங்கிற்குள் விழுந்தார்.  பின்னால் வந்த மோகன்தாஸ் ஓடி வந்தபோது, மற்றொரு சிலாப் உடைந்து அவரும் செப்டிக் டேங்கில் விழுந்தார். இந்த சிலாப் சுஜிலா மீது விழுந்தததால் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த குலசேகரம் தீயணைப்பு படை வாகனம் வழியில் கால்வாயில் கவிழ்ந்தது.

அதன்பின் தக்கலை தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து பொதுமக்கள் உதவியுடன் மோகன்தாஸ், விஜிலா தம்பதியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சுஜிலா இறந்தார். மோகன்தாஸ் சிகிச்சை பெற்று வருகிறார். 

Related Stories: