டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஸ்சார்ஜ்

டெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நிர்மலா சீதாராமன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 26ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

ஒன்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த டிச-26-ம் தேதி மதியம் திடீரென டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றுப்பிரச்சினையுடன் காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததாக கூறப்பட்டது. நெஞ்சு எரிச்சலும் இருந்துள்ளது. ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக கூறினர்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அவர், குணமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 63 வயதாகும் நிர்மலா சீதாராமன் பணிகளில் ஓய்வின்றி பணியாற்றி வந்தார். 2023-2024-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டார்.

இந்த நிலையில் திடீரென அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டியதாகிவிட்டது. வருகிற பிப்ரவரி 1-ந் தேதி அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இருப்பினும் அவரை சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: