மாணவர்கள் கட்டணத்தில்ரூ. 1.69 கோடி மோசடி ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரியின் முன்னாள் நிர்வாகி கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணம் ரூ.1.69 கோடி மோசடி செய்த ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரியின் முன்னாள் நிர்வாகியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரி நிர்வாக செயலாளர் பெஞ்சமின் பிராங்க்ளின் (58) என்பவர் புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 2016ம் ஆண்டு முதல் ஒய்எம்சிஏ தேசிய குழு சார்பாக ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரியின் சேர்மனாக லிபி பிலீப் மேத்யூ மற்றும் செயலாளராக பால்சன் தாமஸ் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மாணவர்களிடம் இருந்து கடந்த 1.4.2019 முதல் 3.10.2019 வரை கல்வி கட்டணமாக 1 கோடியே 69 லட்சத்து 59 ஆயிரத்து 137 ரூபாய் பணம் வசூலித்தனர். அந்த பணத்தை இருவரும் நிர்வாகத்தின் வங்கி கணக்கில் செலுத்தாமல் தங்களது சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தி கல்லூரிக்கு சேரவேண்டிய பணத்தை மோசடி செய்துள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரியின் முன்னாள் சேர்மனாக இருந்த லிபி பிலீப் மேத்யூ மற்றும் செயலாளர் பால்சன் தாமஸ் ஆகியோர் கல்லூரியில் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை சொந்த வங்கி கணக்கில் வரவு வைத்து மோசடி செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து 2 பேர் மீதும் மத்திய குற்றப்பிரிவு மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கேரளாவில் பதுங்கி இருந்து கல்லூரியின் முன்னாள் செயலாளர் பால்சன் தாமஸ் என்பவரை கைது ெசய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள லிபி பிலீப் மேத்யூவை தேடி வருகின்றனர்.

Related Stories: