ஸ்ரீபெரும்புதூரில் கஞ்சா விற்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்து 2.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மேவளூர்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேக நிலையில் நடந்து வந்த 2 பேரை மடக்கி சோதனை நடத்தினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது.

இதன்பின்னர் இருவரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். இதில், அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரி (22), பூந்தமல்லியை சேர்ந்த நாகேந்திரன் (23) என்பதும் இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருவதும் ஓய்வு நேரங்களில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 கல்லூரி மாணவர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: