ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் கோபுரங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் கோபுரங்களில்  வளர்ந்துள்ள செடிகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் கோபுரங்களில் கொடிமரம் எதிரே உள்ள ராஜகோபுரம் மீது செடி, கொடிகள் முளைத்துள்ளன. அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் இருந்து வருகின்றனர். கோபுரங்களில் பல வகையான செடிகள் வளர்ந்து இருப்பதால் கோபுரங்கள் சேதமடையும் அபாயம் இருக்கிறது. கோயிலின் சுற்று சுவர்களில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து வருகின்றன. சமீபத்தில் பெய்த மழை காரணமாக கோயில் கோபுரங்கள் மற்றும் கோயில் சுவர்கள் என்று அனைத்து பகுதிகளிலும் செடிகள் அதிகமாக காணப்படுகின்றன.

இதனால், கோபுரங்கள் மற்றும் சுவர்கள் பழுதடையும் அபாயம் ஏற்படுகிறது. இதனை தேவஸ்தான அதிகாரிகள் கவனத்தில் கொண்டு கோபுரங்கள் மற்றும் சுவர்களில் வளர்ந்து வரும் செடிகளை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோயில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: