மணிமுத்தாறு அருவியில் இன்று 2வது நாளாக குளிக்க தடை

அம்பை: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நேற்று மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது.

இதைத்தொடர்ந்து யானையின் உடலை அடர்ந்த காட்டுப் பகுதியில் அடக்கம் செய்ய வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.  அப்போது அவ்வழியாக செல்லும் போது மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதை கண்டனர்.

மேலும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகமாக இருந்ததால் யானையின் உடலை அடக்கம் செய்ய வனப்பகுதிக்கு கொண்டு செல்லும் போது எவ்வித இடைஞ்சலும் இருக்கக்கூடாது என்பதால் உடனடியாக அருவியில் குளிக்கத் தடை விதித்து சுற்றுலாப்பயணிகள் அனைவரையும் அவசரமாக வெளியேற்றினர். இந்நிலையில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வந்தது.

நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 2வது நாளாக வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: