காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிக்கை; காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் காலியாக உள்ள இரவுக் காவலர் பணியிடத்தை நிரப்ப அரசால் அனுமதிக்கப்பட்டதையடுத்து, கீழ்காணும் தகுதிகளுடைய காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த வேலைநாடுநர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு இரவுக் காவலர் பணி காலி இடத்துக்கு பொதுப் போட்டி (முன்னுரிமை அற்றவர்), (இன சுழற்சிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி எழுத படிக்க தெரிந்தவர் (5ம் வகுப்பு தேர்ச்சி), வயது வரம்பு 01.07.2022 அன்றைய தேதியில் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும்.
