திருமலை : புலிவெந்துலா சிஎஸ்ஐ தேவாலயத்தில் முதல்வர் ஜெகன்மோகன் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார். கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், தனது தாயார் விஜயம்மா, மனைவி பாரதி ஆகியோருடன் கடப்பா மாவட்டம் இடுபுலப்பாயாவில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு புலிவெந்துலா சென்றார். தொடர்ந்து, அங்குள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார்.
