முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, பாஜ நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்: கிருஷ்ணகிரி தேமுதிகவினர் ஒட்டுமொத்தமாக சேர்ந்தனர்

சென்னை: அதிமுக, பாஜ, தேமுதிக கட்சிகளை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், பாஜ மாநிலச் செயலாளர் சி.கே.தீனா மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.திவ்யா ஆகியோர் தலைமையில் கிருஷ்ணகிரி நகர மாணவர் அணி தலைவர் கே.எம்.தினேஷன் ஆகியோர் பாஜவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட மருத்துவர் அணி பொருளாளரும் ஒன்றிய முன்னாள் செயலாளருமான திருவளவன்- மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளரும், பொதுக்குழு முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.ஜெகதீசன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். ஹதேமுதிக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பி.டி.அன்பரசன் தலைமையில் மாவட்ட ஒன்றிய, நகர-பேரூர் நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் என 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.  அ.ம.மு.க.வை சேர்ந்த கிருஷ்ணகிரி நகரத்தைச் சேர்ந்த நகர இளைஞர் அணிச் செயலாளர் ஆர்.சுரேஷ் இணைந்தார்.

மத்தூர் வடக்கு ஒன்றிய பாமக கட்சியின் வன்னியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ஏ.எம்.முருகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், தத்தமது கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அப்போது திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, அமைச்சர் ஆர்.காந்தி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் எ.வ.வேலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை நிலைய அலுவலக செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் டேம் வெங்கடேசன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் டி.ஏ.நாகராஜ், மாவட்ட பொருளாளார் ப.கதிரவன், ஒன்றியச் செயலாளர்கள் வி.ஜி.ராஜேந்திரன், பி.கோவிந்தன், டி.தனசேகரன், குண வசந்தரசு, எம்.அறிஞர், எஸ்.குமரசேன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: