இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்றுகிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்

சென்னை: இயேசு கிறிஸ்து பிறந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது. கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கு பாடகர் குழுவினர் வந்து பாடல்களை பாடி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதுதவிர, தேவாலயங்களிலும், வீடுகளிலும் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு, விளக்குகளால் அலங்கரித்து வைத்தனர். இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 25ம் தேதியன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.

அதன்படி நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை கிறிஸ்துமஸ் பண்டிகை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சாந்தோம், பெசன்ட்நகர், கதீட்ரல் உள்பட தேவாலயங்களில் கொண்டாடப்பட்டது. ஆர்சி தேவாலயங்களில் நேற்று நள்ளிரவில் இருந்தே சிறப்பு ஆராதனையும், பாடகர் குழுவினரால் சிறப்பு பாடல்கள் பாடப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தூய ஜார்ஜ் கதீட்ரல் ஆலயம், சூளைமேடு வருமரசர் ஆலயம், அடையாறு இயேசு அன்பர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது.

இன்று காலை 7.30 மற்றும் மாலை 6 மணிக்கு சிறப்பு பிரார்த்தனையும் நடக்க இருக்கிறது. சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள அந்தோணியார் திருத்தலத்தில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இன்று காலை 8 மற்றும் 10 மணிக்கும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. மேலும், சென்னையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

Related Stories: