உதகையில் 12-ம் ஆண்டு சாக்லேட் கண்காட்சி: இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பதித்துள்ளது

உதகை: உதகையில் 12-ம் ஆண்டு சாக்லேட் கண்காட்சி கலை கட்டியுள்ளது. 187 வகையான சாக்லேட்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள சாக்லேட் கண்காட்சி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பதித்துள்ளது. மலைகளின் ராணியான உதகையில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட்க்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. நீலகிரி வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு பிரத்தியோகமாக தயரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் வாங்காமல் ஊர் திருப்புவதில்லை, அத்தகைய சாக்லேட் பிரியர்களுக்காகவே ஒவ்வொரு ஆண்டும் உதகையில் சாக்லேட் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் 10 நாட்கள் நடைபெறும் 12 ஆவது சாக்லேட் கண்காட்சி உதகையில் தொடங்கியுள்ளது, தனியார் சாக்லேட் நிறுவனம் இந்த கண்காட்சியை நடத்திவருகிறது. கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையாகும் பிளைன் சாக்லேட்கள் முதல் 8000 ரூபாய் வரை விற்பனையாகும் அர்ஜன் சாக்லேட்கள் வரை சுமார் 187 வகையான டார்க் சாக்லேட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. நீலகிரியில் வளரும் ரோஸ் மேரி, தையூவ், கிறீன்டி, ஸ்டீவியா, போன்ற மூலிகை செடிகளை கொண்டு தயாரிக்க படும் சாக்லேட்களும் பாதாம், முந்திரி, பிஸ்தா, பூசணி போன்ற கொட்டைகள் சாக்லேட்கள் கீவி, வெண்ணிலா, போன்ற உதர் பழவகைகளும் கொண்டு தயாரிக்கப்பட்டு சாக்லேட்களும் இதில் அடங்கும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை, அனைவரையும் சாக்லேட் கண்காட்சி கவர்ந்து இருக்கிறது. கண்காட்சியின் சிறப்பம்சமாக நீலகிரி மாவட்டத்தை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தி 200 ஆண்டுகள் ஆனதை விளக்கும் வகையில் 200 கிலோவில் மெகா சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் முதல் முறையாக 187 வகையான டார்க் சாக்லேட்கள் கொண்டு இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியன் ரெகார்ட் ஆப் புக்ஸ் மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்டஸ் சாதனை புத்தகங்களில் இந்த சாதனை இடம் பெற்றுள்ளது.

Related Stories: