சென்னையில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி லாபகரமாக இயங்கி வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: சென்னையில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி லாபகரமாக இயங்கி வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். துறையின் செயல்பாடுகள் இதுவரை சிறப்பாக நடந்து கொண்டிருப்பதாக கூறினார். மாவட்ட அளவில் இருக்க கூடிய 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் அனைத்தும் லாபகரமாக இயங்கி கொண்டிருக்கிறது.  

 

கிராம அளவில் இருக்க கூடிய விவசாயிகளுக்கு குறிப்பாக வழங்க கூடிய தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் 4453 இருக்கிறது. அவற்றிலும் ஏறத்தாழ 3500 க்கு மேற்பட்ட வங்கிகள் லாபகரமாக செயல்பட்டு வருகிறது. எல்லா வகையிலும் கூட்டுறவு துறையின் மூலமாக தான் தமிழகம் முழுவதும் இருக்க கூடிய நியாவிலை கடைகளில் ஏறத்தாழ 33571 நியாயவிலை கடைகளில் அரசின் மூலமாக வழங்கக்கூடிய உணவு பொருட்கள் பொது விநியோக திட்டத்தின் மூலமாக முறையாக கொண்டு போய் சேர்க்கப்படுகிறது.

விவசாய பெருங்குடி மக்கள் பெரும்பான்மையானவர்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள். இத்துறையின் பிரதான நோக்கம் கூட்டுறவு என்பது விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் அவர்கள் மாற்று தொழிலுக்கு செல்லாத காரணங்களால் நிதி ஆதாரங்ககளை பெறுவதற்கும் ஒரு வேலை விவசாயத்தில் நட்டம் ஏற்படுகிற வகையில் அரசு அந்த விவசாயின் சுமையை தாங்குவதற்கும் வழிவகையாக கிராம வங்கிகள் செயல்படுகிறது. கூட்டுறவு என்பது தமிழகத்தில் தான் முதன் முதலாக ஏறத்தாழ 100 ஆண்டுகள் முன்னரே தொடங்கப்பட்டது.

கூட்டுறவு என்று சொன்னால் அதன் தாயகம் தமிழகம் தான்  என்று தெரிவித்துள்ளார்.  அரசின் சார்பில் வழங்கப்படுகின்ற இந்த திட்டங்களை எல்லாம் முறையாக கொண்டு செல்லப்படுகிறதா என்று அறிய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவையும் சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.நியாயவிலை கடைகளில் பொருட்களை வழங்குவது மட்டுமில்லாமல் பண்டக சாலைகளில் நல்ல தரமான பொருட்களை ஆங்காங்கே பெருநகரங்களிலும் அமைத்து தனியார் நிறுவங்களுக்கு இணையான பல்வேறு தயாரிப்பு நிறுவங்களுடைய உற்பத்தி பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. எல்லா வகையிலும் பின்னி பிணைந்த மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் கூட்டுறவு துறை சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். 

Related Stories: