தாராபுரம் அருகே நலிவடைந்து வரும் அம்மிக்கல், ஆட்டுக்கல் தொழில்: வாழ்வாதாரம் இழந்துவரும் தங்களுக்கு உதவ தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகில் அம்மிக்கல் செய்யும் தொழிலாளர்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே போராட்டமாக உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். தங்கள் வாழ்வுக்கும் பிள்ளைகளின் படிப்புக்கும் உதவ தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தாராபுரம் அருகே வரப்பாளையத்தில் நான்கு  தலைமுறைகளாக அம்மி, குளவி, ஆட்டுக்கல் செய்யும்  தொழில் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் இது பிரதான தொழிலாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அன்றாட வாழ்க்கையை நகர்த்திச் செல்வதே மிகப்பெறும் போராட்டமாகவுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

அம்மிக்கல், ஆட்டுக்கல் செய்வதை தவிர வேறுத்தொழில் எதுவும் தெரியாது என கூறும் அவர்கள் தொழிற்நுட்ப வளர்ச்சியின் வீச்சால் தொடர்ந்து வாழ்க்கை நலிவடைந்துவருவதாக கூறுகின்றனர். 15 ஆண்டுகள் முன்புவரை அம்மிக்கல், ஆட்டுக்கல் பாரம்பரிய பொருட்களாக கருதப்பட்டு விற்பனை ஆனதாக கூறும் அவர்கள் தற்போது அம்மி, ஆட்டுகல்லின் தேவைகள் வழக்கொழிந்து போய்விட்டதாக தெரிவிக்கின்றனர்.

அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே பெரும் சவாலாக உள்ள நிலையில் தங்கள் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்த முடியாமல் போய்விடும் என்ற அச்சமும் எழுந்துள்ளதாக கூறுகின்றனர். வாழ்வாதாரம் இழந்துவரும் தங்களுக்கு தமிழ்நாடு அரசு உதவவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories: