ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் நிதி சார்ந்த தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அமிர்தஜோதி தகவல்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், நிதி சார்ந்த ெதாழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2022-23ம் ஆண்டுக்கான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் புதிய அறிவிப்புகளில் தற்போதைய வேலைவாய்ப்பு சந்தையில் வங்கி மற்றும் காப்பீட்டு துறைகளில் கிடைக்கும் வாய்ப்புகளை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், தாட்கோ மூலம் தேர்வு செய்யப்படும் 100 ஆதி திராவிடர் இளைஞர்களுக்கு நிதி மேலாண்மை, காப்பீடு மற்றும் வங்கிச் சேவை போன்ற நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பயிற்சி பெற விரும்பும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் www.tahdco.com (IBPS exam training) என்ற இணையதளத்தில்

சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், கடைசியாக நடைபெற்ற செமஸ்டர் தேர்வு மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் புகைப்படம், போன்ற ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகலாம். 044-25246344, 94450 29456 ஆகிய எண்களிலும்  தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: