பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில் பணியாளர்களுக்கு சீருடை: ஓட்டுனர்களுக்கு பிரத்யேக உடை, ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயில் பணியாளர்களுக்கு சீருடை வழங்க ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2021-2022ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின் படி தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு கோயில்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் பணியிடப் பட்டியலின்படி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் ஆகிய பணியாளர்களுக்கு இரண்டு இணை புத்தாடைகள் மற்றும் இதர கோயில் பணியாளர்களுக்கு இரண்டு இணை சீருடைகளை அந்தந்த கோயில் நிதி மூலம் கொள்முதல் செய்து பணியாளர்களுக்கு வழங்க கோயில் நிர்வாகம் வழங்க வேண்டும்.

இதன் படி 15,511 பணியாளர்களுக்கு சுமார் 15 கோடி செலவில் புத்தாடைகள், சீருடைகள் வழங்கப்பட்டது. தற்போது 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு இரண்டு இணை புத்தாடை, சீருடைகளை வழங்க நடவடிக்கை எடுத்திட கோயில் நிர்வாகிகள் வழங்க வேண்டும்.

மேலும் அர்ச்சகர், பட்டாச்சாரியர், பூசாரி ஆகிய பணியிடங்களில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு பருத்தி வேட்டியும், பெண் பணியாளர்களுக்கு புடவையும் மற்றும் இதர கோயில் பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையும் வழங்க வேண்டும்.

அதன்படி அனைத்து கோயில்களிலும் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு இரண்டு இணை புத்தாடை, சீருடைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அர்ச்சகர், பட்டாச்சாரியர், பூசாரி ஆகிய பணியிடங்களில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு பருத்தி வேட்டியும். பெண் பணியாளர்களுக்கு புடவையும் மற்றும் இதர கோயில் பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையும் வழங்க வேண்டும். கோயிலில் ஓட்டுநர் பணியிடத்தில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு தை திருநாளை முன்னிட்டு இரண்டு இணை வெண்மை நிற சீருடைகளை வழங்கிட நடவடிக்கை கோயில் நிர்வாகிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: