புரட்சி பாரதம் கட்சி சிறுபான்மை பிரிவு சார்பில் 25ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விருது வழங்கும் விழா: பூவை.ஜெகன்மூர்த்தி பங்கேற்பு

சென்னை: புரட்சி பாரதம் கட்சி - ஏபிஎல்எப் சிறுபான்மை பிரிவு சார்பில் 2 வது சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மாநாடு மற்றும்  25ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் பி.தாமஸ் பர்னபாஸ் தலைமை வகித்தார்.

மாநில நிர்வாகிகள் கூடப்பாக்கம் இ.ஜேம்ஸ், பழஞ்சூர் பி.வின்சென்ட், மேக்ஸ் மோசஸ், கே.எஸ்.ரகுநாத், என்.மதிவாசன், ஏ.கே.சிவராமன், என்.பி.முத்துராமன், ராக்கெட் ரமேஷ், எச்.ஸ்டெல்லாமேரி, ஏ.ஜான் அலெக்ஸ் ஆகியோர் வரவேற்றனர். எஸ்.மகிமைதாஸ், புரசை சரவணன், மாநில தொழிற்சங்க துணை செயலாளர் ஜி.டேவிட்ராஜ் முன்னிலை வகித்தனர். முதன்மை செயலாளர் டி.ருசேந்திர குமார் தொடக்க உரையாற்றினார். துணை பொதுச் செயலாளர் பா.காமராஜ் விளக்க உரையாற்றினார்.

விழாவில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை.எம்.ஜெகன்மூர்த்தி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர் அவர், உலகத் தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோஷத்திற்கு தொழில் புரட்சியாளர் விருதும் காயிதே மில்லத் பேரன் தாவூத் மியான்கானிற்கு கல்வியாளர் விருதும் வழங்கி வாழ்த்தி பேசினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பெஞ்சமின், எஸ்.அப்துல்ரஹீம் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர்.

விழாவில், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், முன்னாள் எம்எல்ஏ.க்கள் தி.நகர் பி.சத்யா, விருகம்பாக்கம் வி.என்.ரவி, மதனந்தபுரம் பழனி, அபயம் தலைவர் ஏ.என்.லெமூரியன், புரட்சி தமிழகம் தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்தி, ஜே.ஜார்ஜ் ஸ்டீபன், பேராயர்கள் எஸ்றா சற்குணம், அந்தோணிசாமி, நீதிநாதன், எஸ்.எம்.ஜெயக்குமார், சிறுபான்மை மக்கள் நல கட்சி தலைவர் என்.சாம்ஏசுதாஸ், பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வழக்கறிஞர் மோகனசுந்தரம், பி.எஸ்.பி பொதுச்செயலாளர் டி.மைக்கேல்தாஸ், தொழிலதிபர்கள் டி.எஸ்.சதீஷ்பாபு, வி.என்.கண்ணன் கலந்து கொண்டு பேசினர். இதில் மாநில நிர்வாகிகள் முல்லை கே.பலராமன், பி.வீரமணி, பூவை.ஆர்.சரவணன், பரணி பி.மாரி, கூடப்பாக்கம் இ.குட்டி, டி.கே.சீனிவாசன், மணவூர் ஜி.மகா, வலசை எம்.தர்மன், பிரீஸ் ஜி.பன்னீர், பி.சைமன்பாபு, கே.எம்.ஸ்ரீதர், ஒய்.ஜான்சன் ஆம்ஸ்ட்ராங், இ.ரமேஷ் ஜி.பெரமையன், திருமங்கலம் எம்.பி.வேதா, ஆண்டரசன் அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞரணி செயலாளர் சி.எல்.எட்மன் நன்றி கூறினார்.

Related Stories: