திமுக அரசு அமைந்த 15 மாதத்தில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள்

சென்னை: தமிழகத்தில் திமுக அரசு அமைந்த 15 மாதத்தில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 2.20 லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில்கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் 2.20 லட்சம் வேளாண் மின்  இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில், திமுக அரசு அமைந்த 15 மாதத்தில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

எரிசக்தி துறையின் 2021-22ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மாநிலத்தின் விவசாய உற்பத்தியினை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2021 செப்டம்பர் 23ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் ரூ.3,025 கோடி  மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது.

எரிசக்தித் துறையின் 2022-23ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், நடப்பு நிதியாண்டில் 50,000 எண்ணிக்கையில் புதிய விவசாய இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.   அதன்படி தமிழக அரசினுடைய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய ஒரு நாளாக அமைந்தது. ஏற்கனவே ஒரு லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டது.

அத்துடன் சேர்த்து ஐம்பதாயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே ஒட்டு மொத்தமாக  ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இணைப்புகள், அதிலும் இந்த குறுகிய காலத்திற்குள்ளாக, 15 மாதகாலத்திற்குள்ளாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் எந்த அரசும் இப்படி ஒரு சாதனையைச் செய்ததாக வரலாறு கிடையாது. இந்தியாவிலே எந்த மாநிலம் செய்யாததை திமுக அரசு செய்து முடித்துள்ளது. மேலும் ஆறே மாதத்தில், ஒரு லட்சம் உழவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஒன்றரை லட்சம் உழவர்கள் பயனடைகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் பத்தாண்டுகள் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண் மின்  இணைப்புகள் மட்டும் தான் வழங்கப்பட்டது.  ஆனால் திமுக அரசு அமைந்த 15 மாதத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகள்  வழங்கி சாதனை படைத்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: