செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கிறிஸ்தவ மயானபூமி நிரந்தரமாக மூடல்

சென்னை: செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கிறிஸ்தவ மயானபூமியில் உடல்களை புதைக்க இடமில்லாத காரணத்தினால் மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மயானபூமி நிரந்தரமாக மூடப்படுகிறது.

சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், பகுதி-25, வார்டு-124க்குட்பட்ட சென்னை-600 028, மந்தைவெளி, செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கிறிஸ்தவ மயானபூமியில் உடல்களை புதைக்க இடமில்லாத காரணத்தினால் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மேற்கண்ட மயானபூமி நிரந்தரமாக மூடப்படுகிறது. மேலும், இக்கல்லறை வளாகத்தில் புதியதாக கல்லறைகள் கட்டுவதற்கான அனுமதியும் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த மயானபூமிக்கு மாற்றாக உடல்களை அடக்கம் செய்வதற்கான கல்லறைகள் குறித்த பட்டியல்கள் பொதுமக்கள் அறியும் வண்ணம் மயானபூமியின் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வ.எண்      மண்டலம்            வார்டு    மயானபூமிகள்    

1.              அண்ணாநகர்    101            மாநகராட்சி கிறிஸ்தவ மயானபூமி, கல்லறை சாலை, கீழ்ப்பாக்கம்    

2.              அடையாறு    171            ஒய்.எம்.சி.ஏ. கல்லறை, மவுண்ட் சாலை, நந்தனம் வளாகம்    

3.              அடையாறு    171            சின்னமலை கிறிஸ்தவ கல்லறை, எல்.டி.ஜி- சாலை, சென்னை-15.    

4.              அடையாறு     173            சாந்தோம் நெடுஞ்சாலை பட்டினப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறை    

5.              அடையாறு    179            அட்வன்ட் கிறிஸ்தவ கல்லறை, வேளச்சேரி, சென்னை    

ஏற்கனவே மாநகராட்சியின் அனுமதி பெற்று செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கிறிஸ்தவ மயானபூமியில் கல்லறை கட்டியிருக்கும் நபர்களின் குடும்பத்தினருக்கு சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டப்பிரிவு 349 (22) துணை விதி எண் 14ன்படி 14 ஆண்டுகளுக்கு கழித்து வரும் அதே குடும்பத்தின் உறவினர் உடல்களை அதே கல்லறையில் தோண்டி மீண்டும் அடக்கம் செய்ய விண்ணப்பிப்போருக்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Stories: