வேலம்மாள் பள்ளி சார்பில் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற குகேஷிற்கு ரூ.10 லட்சம் பரிசு: விஸ்வநாதன் ஆனந்த் வழங்கினார்

சென்னை: சென்னை, மேல்அயனம்பாக்கத்தில்  உள்ள வேலம்மாள் வித்யாலயா இணைப்பு பள்ளியில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சதுரங்க நாயகன் கிராண்ட் மாஸ்டர் குகேஷை வாழ்த்துவதற்காக, பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமை தாங்கினார்.

பள்ளி முதல்வர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் பத்ம விபூஷன் விருது பெற்ற உலக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சதுரங்கப் போட்டியின் அடையாளமாகத் திகழும் சதுரங்க வீரர் குகேஷிற்கு மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி சார்பில் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி பாராட்டினார்.

மேலும் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் பேசும் போது, உலகின் தலைசிறந்த நார்வே வீரர் மேக்னெஸ் கால்சனை வீத்தி சாம்பியன் ஆக வேண்டும் என்பது எனது அடுத்த இலக்கு என்றார். மேலும் கிராண்ட் மாஸ்டர் குகேஷின் பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா, குகேஷின் தாயார் டாக்டர் பத்ம குமாரி, தந்தை டாக்டர் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: