250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் சேகர்பாபு சீர்வரிசை வழங்கினார்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில், 250 கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை திட்டத்தின் கீழ், தண்டையார்பேட்டையில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று மாலை நடந்தது. ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபினேசர் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கர்ப்பிணிகளுக்கு தாம்பூல தட்டில் புடவை, பழ வகைகள், சத்தான பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசைகளை வழங்கினார். கர்ப்பிணிகளுக்கு ஐந்து வகையான சாதம் மற்றும் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது.  பெண்கள் கர்ப்பமடைந்ததும் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்தான உணவுகளையே உட்கொள்ள வேண்டும், கர்ப்ப காலத்தை விட பாலூட்டும் காலத்தில், அதிகமான சத்துள்ள உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.

இரும்பு சத்து மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம் உள்ளிட்டவை குறித்து அவர்களுக்கு தெளிவான வழிமுறைகள் உள்ளடக்கிய கையேடு வழங்கப்பட்டது. அங்கன்வாடி மைய ஆசிரியர்கள் 150 பேருக்கு புத்தாடை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் இளைய அருணா, பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன், மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மாவட்ட அவைத்தலைவர் வெற்றி வீரன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருது கணேஷ் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்ட அலுவலர்கள் பவித்ரா, அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: