என்ஜிஒ காலனி புதிய உழவர் சந்தையில் 6 நாளில் ரூ.10 லட்சம் காய்கறிகள் விற்பனை: கூடுதல் கடைகள் அமைக்க வேளாண் துறை திட்டம்

நெல்லை: நெல்லை மாநகரில் அன்புநகர், டவுன் கண்டியப்பேரி, மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. மாநகரில் மேலும் ஒரு புதிய உழவர் சந்தை என்ஜிஒ காலனி ரெட்டியார்பட்டி சாலையில் திருநகர் அருகே அமைக்கப்பட்டது.

இதனை கடந்த 7ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொலி மூலம் திறந்துவைத்தார். அன்று முதல் இந்த சந்தை செயல்படத்தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக இங்கு 16 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் இருந்தே இங்கு விற்பனை செய்வதற்கு உழவர்களும் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்குவதற்கு பொதுமக்களும் அதிகளவில் வருகின்றனர்.

 

என்ஜிஒ காலனி, திருநகர், மகிழ்ச்சிநகர், திருமால் நகர், ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு இந்த உழவர் சந்தையில் அருகாமையில் இருப்பதால் அதிகாலையிலேயே ஆர்வமுடன் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த உழவர் சந்தை செயல்படத் தொடங்கியதில் இருந்து இன்று வரை 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.  

28 மெட்ரிக் டன் அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை மக்கள் வாங்கிச்சென்றுள்ளனர். 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் விற்பனை செய்ய வருகின்றனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பயனடைந்துள்ளனர். இந்த காய்கறி சந்தைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்ேபாது 16 கடைகள் உள்ளன. வரவேற்புக்கு ஏற்ப கூடுதல் கடைகள் அமைக்க வேளாண்மை துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: