அரபிக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: அரபிக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கேரளாவின் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் எந்த பாதிப்பும் இருக்காது. அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி நாளை அந்தமானை நோக்கி நகரும். வட கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: