சிவகங்கை அருகே அமைக்கப்பட்டுள்ள செட்டிநாடு நகரத்தார் சமூகத்தின் வித்யாசமான அருங்காட்சியகம்: உலகப்புகழ் பெற்ற கைமுறுக்கு முதல் சீப்புச்சீடை வரை காட்சி..

சிவகங்கை : சிவகங்கை அருகே அமைக்கப்பட்டுள்ள செட்டிநாடு நகரத்தார் சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு வழக்கங்களை படம் பிடித்து காட்டும் வித்யாசமான அருங்காட்சியகம் ஆய்வாளர்களையும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியில் 4000சதுரடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் செட்டிநாட்டின் மெகா மாளிகைகள் 4 தலைமுறைகளாக பயன்படுத்தும் தேக்கு மரத்திலான விட்டு உபயோக பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மரத்தொட்டில் உள்ளிட்ட திருமண சீர்வரிசைகள் ஒருபுறம் கவனிக்க வைக்க, திருமண சடங்குகளும், ஆபரணங்களும் சுவரில் ஓவியங்களாக பளிச்சிடுகின்றன. உலகப்புகழ் பெற்ற கைமுறுக்கு முதல் சீப்புச்சீடை வரையிலான செட்டிநாட்டு இடை பலகாரங்களும் மாதிரி வடிவங்களாக ஜொலிக்கின்றன. ஓட்டை காசு உள்ளிட்ட நூற்றாண்டு காண்ட நாணயம் முதல் இன்றைய ரூபாய் நோட்டுகள் வரை அணிவகுக்க கால காலமாக கணக்குகளை எழுத பயன்படுத்திய ஓலை சுவடிகள் அதில் எழுதுவதற்கான எழுத்தாணிகள் பழைய அனா கணக்கு பெயரீடுகள்  அனைத்தும் இப்புதுமையான அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து நகரத்தாரால் கொண்டுவரப்பட்டு பயன்பாட்டில் இருந்து பொருட்களும் பீங்கான் பொருட்களும், பல்லாங்குழி போன்ற பாரம்பரிய சாமான்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உறவுகளே இல்லாமல் போய் கொண்டு இருக்கும் இன்றைய நவீனயுக வாழ்க்கையில் தமது பண்பாட்டையும், கலாச்சார அடையாளங்களையும் அடுத்து வரும் தலைமுறைக்கு மௌவுனமாக கடத்திக்கொண்டு இருக்கிறது இந்த செட்டிநாடு அருகாட்சியகம் என்றால் மிகையில்லை. 

Related Stories: