சவுதியில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.comல் கண்டு பயனடையலாம். இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://omcmanpower.com/regformnew/registration.php?type=mohform என்ற வலைதள இணைப்பில் தவறாமல் பதிவுசெய்து பயனடையலாம். எந்த ஒரு இடைத்தரகர்களோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: