வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறுகிறது: இந்திய வானிலை மையம்

டெல்லி: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறுகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் சற்று நேரத்தில் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து 390 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவுக்கும், புதுச்சேரிக்கும் இடையே மாமல்லபுரத்திற்கு அருகே புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுகுறைந்து புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: